டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக வெளியிட உள்ள அல்ட்ரோஸ் ரேசர் காருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் வேரியண்ட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.
அல்ட்ரோஸ் ரேசரின் டீசரில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ள இந்த காரில் R1, R2, R3 என மூன்று விதமான வேரியண்ட் பெற்று 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலுக்கு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
16 அங்குல அலாய் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டத்துடன் மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆனது புராஜெக்டர் ஹெட்லேம்ப் பெற்றதாகவும், க்ரூஸ் கண்ட்ரோல் கொண்டதாக அமைந்துள்ளது. R2 வேரியண்டில் சன்ரூஃப் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி கேமரா பெற்றுள்ள நிலையில் டாப் வேரியண்டில் iRA கனெக்டேட் கார் நுட்பம், காற்று சுத்திகரிப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.
மிக சிறப்பான நிற கலவையை வழங்கும் வகையில் அமைந்துள்ள அல்ட்ரோஸ் ரேசரில் ஆடாமிக் ஆரஞ்ச், அவெனியூ வெள்ளை மற்றும் ப்யூர் கிரே நிறங்களை பெற்றுள்ளது. விற்பனைக்கு ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் ரூ.10 லட்சத்தில் டாடா அல்ட்ரோஸ் ரேசர் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.