120hp பவரை வழங்கும் Altroz Racer பிரவுச்சர் விபரம் கசிந்தது

டாடா மோட்டார்சின் முதல் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் ( Tata Altroz Racer) காரின் முழுமையான நுட்பவிபரங்கள், வேரியண்ட் வாரியான வசதிகள் மற்றும் நிறங்கள் என அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பிரவுச்சர் இணையத்தில் அறிமுகத்துக்கு முன்னதாகவே கசிந்துள்ளது.

இந்தியாவில் கிடைக்கின்ற ஐ20 என்-லைன் மாடலுக்கு சவால் விடுக்கின்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான அல்ட்ரோஸ் ரேசர் காரில் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 120 hp மற்றும் 170Nm டார்க்கை வழங்கும் நிலையில், 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

R1, R2, மற்றும் R3 என மூன்று வகைகளை பெறுவதுடன் ஆரஞ்ச், அவெனியூ வெள்ளை மற்றும் ப்யூர் கிரே என்ற மூன்று  நிறங்களுடன் அடிப்படையாகவே 16 அங்குல அலாய் வீல், ஸ்போர்ட்டிவ் பாடி கிராபிக்ஸ் உடன் 6 ஏர்பேக்குகளுடன் உறுதியான கட்டுமானத்தை பெற்றதாக விளங்க உள்ளது.

அல்ட்ரோஸ் ரேசர் R1

  • R16 அலாய் வீல்
  • 6 ஏர்பேக்குகள்
  • Leatherette இருக்கை
  • 26.03cm ப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ள ஸ்மார்ட் கீ
  • LED DRL
  • வாசருடன் கூடிய பின்புற வைப்பர்
  • 8 ஸ்பீக்கர் (4 ஸ்பீக்கர்கள் + 4 ட்வீட்டர்கள்)
  • ஆட்டோமேட்டிக் ஏசி
  • முன்புற மூடுபனி விளக்குகள்
  • ரியர் டிஃபோகர்
  • 4 பவர் விண்டோஸ்
  • எலக்ட்ரிக் அட்ஜெஸ்டபிள் ORVM
  • க்ரூஸ் கண்ட்ரோல்
  • அட்ஜெஸ்டபிள் டிரைவர் இருக்கை
  • பின்புற ஏசி வென்ட்
  • ஆட்டோ ஹெட்லேம்ப்கள்
  • ரெயின் சென்சிங் வைப்பர்
  • 10.16 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • டாஷ்போர்டில் ஆம்பியன்ட் விளக்குகள்

அல்ட்ரோஸ் ரேசர் R2

R1 வேரியண்டின் வசதிகளுடன் கூடுதலாக,

  • குரல் வழி உத்தரவு மூலம் இயங்கும் மின்சார சன்ரூஃப்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • 17.78 செமீ TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா சிஸ்டம் (SVS)
  • காரின் அருகே மறைந்திருக்கும் இடங்களை அறிய Blind View Monitor
  • மிக விரைவாக குளிர்விக்க Xpress Cool வசதி

அல்ட்ரோஸ் ரேசர் R3

R2 வேரியண்டின் வசதிகளுடன் கூடுதலாக,

  • டாடாவின் iRA- கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள்
  • முன்பக்க இரு இருக்கையிலும் காற்றோட்டமான வசதி
  • காற்று சுத்திகரிப்பு

ஜூன் 7 ஆம் தேதி விற்பனைக்கு வரவிருக்கின்ற டாடாவின் அல்ட்ரோஸ் ரேசர் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம்.

அல்ட்ரோஸ் ரேசர் டீசர்

பிரவுச்சர் உதவி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.