BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா…!

ஏர்டெல் மற்றும் ஜியோவை விட பிஎஸ்என்எல் குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், அதன் தனித்துவமான திட்டங்களின் அடிப்படையில் பிஎஸ்என்எல் முன்னணியில் உள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், BSNL உங்களுக்கான தனித்துவமான வேலிடிட்டி கொண்ட ப்ரீப்பெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டம் 455 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதுதவிர தினமும் 3ஜிபி டேட்டாவும், அதுவும் சுமார் ரூ.6 செலவில் கிடைக்கும். ஏர்டெல் மற்றும் ஜியோவிடம் கூட இவ்வளவு நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டம் இல்லை.

BSNL இன் ரூ.2998 ப்ரீபெய்ட் திட்டத்தில் தான் இத்தனை நன்மைகளும் உள்ளன.  இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 455 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது, அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொந்தரவு 455 நாட்களுக்கு இருக்காது. விலை மற்றும் வேலிடிட்டியைப் பார்த்தால், திட்டத்தின் தினசரி செலவு வெறும் 6 ரூபாய் 58 பைசா மட்டுமே இருக்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் அழைப்புகளையும் (உள்ளூர்/எஸ்டிடி) வழங்குகிறது. டேட்டாவை பொறுத்தவரை மொத்தம் 1365 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகும், 40kbps வேகத்தில் இணையத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இதுமட்டுமின்றி, திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

ஆனால் தற்போது இந்த திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டத்தில் மட்டுமே உள்ளது. நீங்களும் இந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இந்த திட்டத்தை முயற்சி செய்யலாம். BSNL ரூ 2998 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய, நீங்கள் BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று “மொபைல் ப்ரீபெய்டு திட்டங்கள்” பிரிவின் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீர் வட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதபோல் இருக்கும் மற்றொரு திட்டம் என்னவென்றால், பிஎஸ்என்எல் ஏப்ரல் 2024 இல் தொடங்கிய ரூ.2,398 என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இதன் வேலிடிட்டி 425 நாட்கள். விலையைப் பார்த்தால், தினசரி செலவு சுமார் 5 ரூபாய் தான். திட்டத்தில், பயனர்கள் 425 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள். இது தவிர, வாடிக்கையாளர்கள் தினமும் 2ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதாவது, வேலிடிட்டி முழுவதும் 850ஜிபி டேட்டா இருக்கும். தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 40kbps ஆக இருக்கும். இதுமட்டுமின்றி, திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இது தவிர, இந்த திட்டம் EROS Now இலவச சப்ஸ்கிரிப்சனும் இருக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.