நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களது நெருங்கிய வட்டாரத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதை சிவகார்த்திகேயனே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதைப் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனை அடுத்து திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.