விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி விசிக வேட்பாளர் ரவிகுமார் 68,239 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பாக்கியராஜைவிட 9,954 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்காக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என மூவர் பணியில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமார், அதிமுகவின் ஜெ.பாக்கியராஜ், பாமகவின் எஸ். முரளிசங்கர், நாம் தமிழர் கட்சியின் மு. களஞ்சியம், பகுஜன் சமாஜ் கட்சியின் கலியமூர்த்தி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் களத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் மொத்தம் 11,50,164 வாக்குகள் பதிவாகின. இது 76.52 சதவீதமாகும். இதில் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி விசிக வேட்பாளர் ரவிகுமார் 68,239 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பாக்கியராஜைவிட 9,954 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
3 வது சுற்று முடிவில் வாக்குகள் விவரம்: விசிக ரவிக்குமர் 68,239, அதிமுக பாக்கியராஜ். 58285, பாமக முரளி சங்கர் 27032, நாதக களஞ்சியம் 8451.