நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண கால நிலையினால் 23 மாவட்டங்களின் 251 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23, 721 குடும்பங்களின் 87,379 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் குறைந்த பாதிப்புக்கள் காணப்படுகின்றன.
மேல் சபரகமும் மற்றும் தென்மாகாணத்தின் மாவட்டங்களில் நிலைமை, கடும் காலநிலையுடன் காணப்படுகின்றது.
விசேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களும், தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், மற்றும் பதுளை, குருநாகலை, நுவரெலியா மாவட்டங்களிலும் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் படி 12 பேர் இறந்துள்ளதுடன் அதில் மாத்திறையில் நான்கு பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், சீதாவக – கொழும்பு பகுதியில் மூன்று பேரும் இறந்துள்ளதுடன் ஐந்து பேர் காணாமல் போய் உள்ளனர்.
இது தவிர நாடு முழுவதும் தற்போது 119 நிவாரண மத்திய நிலையங்கள் செயற்படுகின்றன.
அவற்றில் 2,313 குடும்பங்களின் 23,706 நபர்கள் இந்த மத்திய நிலையங்களில் தங்கியுள்ளார்கள். விசேடமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 29 மத்திய நிலையங்களில் 830 குடும்பங்களின் – 3400 நபர்களும், மாத்தறை 7 மத்திய நிலையங்களில் 92, 391 நபர்களும், களுத்துறையில் 46 மத்திய நிலையங்களில் 703குடும்பங்களின் 2,651 பேரும், காலியில் 5 மத்திய நிலையங்களில் 25 குடும்பங்களின் 608 நபர்களும் , கொழும்பில் 11 மத்திய நிலையங்களில் 252 குடும்பங்களும் தங்கியுள்ளனர்.
விமானப்படை 3 ஹெலிகொப்டர்கள் பாதுகாப்பு வழங்குவதற்குத் தயார் நிலையில் உள்ளன.
சகலருக்கும் மூன்று வேளைகளுக்குமான . சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதில் மாவட்ட அரசாங்க அதிபர்களின் தலைமையில், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவுடன் முப்படையினரும் இணைந்து செயற்படுகின்றனர்.