அதிக வசதிகளுடன் ட்ரீம் சீரியஸ் வெளியிட்ட மாருதி சுசூகி

ரூ.4.99 லட்சம் விலையில் மாருதி ஆல்டோ K10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என மூன்று மாடல்களில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் சந்தைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

குறிப்பாக டீலர் வகையில் கஸ்டமைஸ் செய்யப்படுகின்ற இந்த சிறப்பு ட்ரீம் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரம் பின்வருமாறு;-

Maruti Celerio Dream Series

செலிரியோ LXi வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள ட்ரீம் சீரியஸில் பாய்னியர் மல்டிமீடியா ஸ்டீரியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ஒரு ஜோடி ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு விலை ரூ.4.99 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இந்த ஆக்செரீஸ் தேர்வு செய்வதனை விட ட்ரீம் வரிசை மூலம் ரூ.58,000 மிச்சப்படுத்தலாம்.

Maruti Alto K10 Dream Series

ஆல்டோ கே10 காரில் VXi+ வேரியண்டில் கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆல்டோ கே10 ட்ரீம் சீரிஸ் காரினை தேர்வு செய்பவர்களுக்கு டீலர் மூலமாக ரூ.49,000 வரை ஆக்சஸரீஸ் மீது தள்ளுபடியைப் பெறுவார்கள்.

Maruti S-presso Dream Series

எஸ்-பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி காருக்கு மாருதி அறிமுகப்படுத்தியுள்ள ட்ரீம் சீரியஸ் மூலம் வீல் ஆர்ச்சில் மேட் பிளாக் கிளாடிங், மற்றும் கருப்பு நிறத்துடன் வெள்ளி நிறத்தை பெற்ற பாடி சைட் மோல்டிங், முன் மற்றும் பின் மற்றும் பக்கவாட்டில் ஸ்கிட் பிளேட்டு, ரிவர்ஸ் கேமரா, ஒரு ஜோடி ஸ்பீக்கர்கள், செக்யூரிட்டி அமைப்பு, இன்டீரியர் ஸ்டைலிங் கிட்,  கிரில் மற்றும் பின்புறதில் குரோம் ஹேட்ச், மற்றும் நம்பர் பிளேட்டிற்கு லைசென்ஸ் ஃபிரேம் பெற்றுள்ளது.

சாதாரணமாக இந்த ஆக்செரீஸ் தேர்வு செய்வதனை விட ட்ரீம் வரிசை மூலம் ரூ.63,000 மிச்சப்படுத்தலாம்.

ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என மூன்று கார்களிலும் 1.0 லிட்டர் K10C பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 49 kW (66.621 PS) @ 5500 rpm மற்றும் 89 Nm @ 3500 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டவை மட்டும் ட்ரீம் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.