சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அஸ்வின் விலகியது ஏன்? ரீவைண்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உயர் செயல்திறன் மையத்தை திறக்க இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் பயிற்சி பெற இருக்கிறார்கள். அந்த பிளேயர்கள் எப்படி பயிற்சி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டல்களும் அஸ்வின் கொடுக்க இருக்கிறார். ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அஸ்வினுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதால், ஏலத்துக்கு முன்பாகவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஸ்வின் வெளியேறியது ஏன்?

ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரான அஸ்வின் முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடினார். 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த அவர் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின்னர், சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார். இது பலருக்கும் சர்பிரைஸாக இருந்தது. இதுகுறித்து அஸ்வின் ஒரு சில ஆண்டுகள் கொடுத்த விளக்கத்தில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்குடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புவதாகவும், சென்னை சேப்பாக்கத்தில் விளையாட சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளக்கம்

அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து அப்போது ஸ்டீபன் கொடுத்த விளக்கத்தில், அவரை ஏலத்தில் எடுக்க நாங்கள் முயற்சித்தோம். அவருக்கான பட்ஜெட்டாக 4 கோடி ரூபாய் வரை நிர்ணயித்து வைத்திருந்தோம். ஆனால் அதற்கு மேல் சென்றதால் எங்களால் அஸ்வினை ஏலத்தில் எடுக்கவில்லை என்றார். இது குறித்து சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காஸி விஸ்வநாதன் அண்மையில் பேசும்போது, ஒரு பிளேயரை ஏலத்தில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். 

தோனி கேப்டன் பொறுப்பில் விலகல் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி ஐபிஎல் 2024ல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டன் என்றும் அடையாளம் காட்டினார். தோனி தலைமையில் சிஎஸ்கே இதுவரை 5 ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்றிருக்கிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்ட தோனி, அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.