அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது. இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது . அருமையான சலவைக் கற்களால் […]