இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.10 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற சிறப்பான ரேஞ்ச், பேட்டரி மற்றும் வசதிகள் போன்றவற்றை எளிமைப்படுத்தி எந்த ஸ்கூட்டரை வாங்குவது என முடிவு செய்யலாம்.
ரூ.1 லட்சத்தில் இ-ஸ்கூட்டர் வாங்கலாமா.?
குறிப்பாக தற்பொழுது இந்தியாவில் செயற்படுத்தி வரும் PLI திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற நிலையில், இதனை பயன்படுத்தி பஜாஜ் சேட்டக் 2901, ஓலா S1X, டிவிஎஸ் ஐக்யூப், ஏதெர் ரிஸ்டா மற்றும் ஆம்பியர் நெக்சஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்களை ஒப்பீட்டு எந்த மாடலில் அதிக வசதிகள் உள்ளன என்பதனை அறிந்து கொள்ளலாம். மேலும் அடிப்படையான வசதிகளை மட்டும் பெற்று விளங்குகின்ற இந்த ஸ்கூட்டர்களில் பல்வேறு பிரீமியம் வசதிகள் இடம்பெற்றிருக்காது.
தினசரி 40-60 கிமீக்கு குறைந்த தொலைவு பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு ஏற்றதாக தொகுக்கப்பட்டுள்ள இ-ஸ்கூட்டர்களில் சற்று கூடுதலான ரேஞ்சை S1X பட்டியலில் இருந்தாலும் நிகழ்நேரத்தில் சற்று குறைவாகவே வழங்குகின்றன. பொதுவாக இந்த ஸ்கூட்டர்களில் அதிகபட்ச வேகத்தை நெக்சஸ் வெளிப்படுத்துகின்றது.
தயாரிப்பாளர் | பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங், டாப் ஸ்பீடு |
Bajaj Chetak 2901 | பேட்டரி – 2.9 Kwh, IDC ரேஞ்ச் – 123km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-95 km, அதிகட்ச வேகம் – 63km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hrs |
TVS iqube 2.2kwh | பேட்டரி – 2.2 Kwh, IDC ரேஞ்ச் – 75km/charge , உண்மையான ரேஞ்ச் – 65-70 km, அதிகட்ச வேகம் – 75km/hr சார்ஜிங் நேரம் (0-80%) – 2 hrs |
Ather Rizta (S,Z) | பேட்டரி – 2.9 Kwh, IDC ரேஞ்ச் – 123km/charge , உண்மையான ரேஞ்ச் – 90-100 km, அதிகட்ச வேகம் – 80km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 8 hr 30 min |
Ampere Nexus | பேட்டரி – 3 Kwh, CVMR ரேஞ்ச் – 136km/charge , உண்மையான ரேஞ்ச் – 95-105 km, அதிகட்ச வேகம் – 93km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 3 hr 22 min |
Ola S1X 2kwh | பேட்டரி – 2 Kwh, IDC ரேஞ்ச் – 95km/charge , உண்மையான ரேஞ்ச் – 70-75 km, அதிகட்ச வேகம் – 85km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min |
Ola S1X 3kwh | பேட்டரி – 3 Kwh, IDC ரேஞ்ச் – 143km/charge , உண்மையான ரேஞ்ச் – 110-115 km, அதிகட்ச வேகம் – 90km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 7 hr 40 min |
Ola S1X 4kwh | பேட்டரி – 4 Kwh, IDC ரேஞ்ச் – 190km/charge , உண்மையான ரேஞ்ச் – 140-150 km, அதிகட்ச வேகம் – 90km/hr சார்ஜிங் நேரம் (0-100%) – 6 hr 50 min |
மேலே உள்ள பட்டியலில் உள்ள ஸ்கூட்டர்களில் மிக சிறப்பான வகையில் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகள் நீக்கப்பட்டு அல்லது மிக குறைவாக வழங்கப்பட்டிருக்கின்றது.
புதிதாக வந்துள்ள பஜாஜ் சேட்டக் 2901 மாடலும் விலை குறைவாக துவங்கி ஐக்யூப் மற்றும் ஓலா S1X இ-ஸ்கூட்டர்களுக்கு கடும் சவாலினை வெளிப்படுத்துகின்றது. புதிதாக வந்த ஏத்தர் ரிஸ்டாவின் ரூ.1.10 லட்சத்தில் துவங்கினாலும் இந்த மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
Chetak 2901 vs Rivals on road Price in Tamil Nadu
EMPS2024 மானியத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தொகுக்கப்பட்டுள்ளது.
e-Scooter | Price |
Bajaj Chetak 2901 | ₹ 1,07,431 – ₹ 1,11,124 |
TVS iQube | ₹ 1,16,137 – ₹ 1,96,757 |
Ather Rizta | ₹ 1,19,532- ₹1,54,543 |
Ampere Nexus | ₹ 1,18,901- ₹1,28,985 |
Ola S1X | ₹ 81,787 – ₹ 1,12,500 |