கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று பிரதமர் தினேஷ் குணவர்தன அடுத்த வாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு குழுவின் தலைவர் என்றவகையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த அழைப்பை ஏற்று வருகை தரும் பிரதமரின் விஜயம் தொடர்பாக நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல் செய்யும் கலந்துரையாடல் ஒன்றை சூம் செயலி ஊடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை நடத்தினார்.
முன்பதாக உஸ்ஸட்டகெய்யாவ , தல்தியாவ பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரப் பிரதேசத்தை ஆழப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அப்பிரதேச கடற்றொழில் சங்கப்பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலின்போது குறித்த இறங்குதுறையை உடனடியாக ஆழப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள நாரா நிறுவனத்தின் பணிகளின் சமகால முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இன்று காலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாரா நிறுவனம் முன்னெடுக்கும் செயற்தின்டங்கள் ஆராயப்பட்டது.
குறிப்பாக சாலை, முல்லைத்தீவு, நந்திக்கடல் , நாயாறு, சுண்டிக்குளம் , அறுகம்பே , மட்டக்களப்பு ,சிலாபம் ,புத்தளம் , கொக்கல களப்புகளின் ஆழப்படுத்தல் மற்றும் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மீன் குஞ்சுகள், இறால் குஞ்சுகளை வைப்புச் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கான ஆராய்வுகள் , மதிப்பீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது