T20 உலகக் கிண்ணத்திற்குச் சென்ற இலங்கை கிரிகெட் அணி எதிர்கொண்ட சிக்கல்கள் சில தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (ஐ.சி.சி) கடிதம் அனுப்பியுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விமானமொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரினால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 7 மணித்தியாலங்கள் தங்கியிருக்க வேண்டியேற்பட்டமை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
T20 உலகக் கிண்ணணத்திற்குச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே விளையாட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை அணிக்கு விமானம் ஒன்று இல்லாது போனமையையே இங்கு குறிப்பிட்டார். ஆனால் இதன்போது இலங்கை அணி மாத்திரமல்ல, அயர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளும் விமானமொன்றின் தொழில்நுட்பக் கோளாரினால் 7 மணித்தியாலங்கள் இவ்வாறு விமானநிலையத்தில் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.
ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்காவில் வேறுபாடு காட்டப்படுகிறது. பல சிக்கல்களுக்கு மத்தியில் உலக கிரிகெட் நிறுவனம் அமெரிக்காவில் இப்போட்டியை நடாத்துகின்றது. அமெரிக்க கிரிகெட் நிறுவனம் ஐ.சி.சி நிறுவனத்தினால் தடைசெய்யப்பட்டே உள்ளது. எனினும் கிரிகெட் விளையாடுகிறார்கள்.
நானும் எனது சொந்தச் செலவில் இந்தப் போட்டியை பார்க்கச் சென்றேன். புக்லின் மெரியட்டில் மேலும் அணிகள் காணப்பட்டன. விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் என்பவற்றிற்கு இடையே 45நிமிடப் பயணத் தூரம் இருக்க வேண்டுமாயினும் ஒன்றரை மணித்தியாலமளவில் பாரிய தூரத்தில் ஹோட்டல் அமைந்திருந்தது.
ஆடுகளம் கூட பொருத்தமற்றது. இன்று இரவு நடைபெறவுள்ள போட்டியில் விiளாயட்டு வீரர்களின் உயிர் போய் வரும் என நாம் நினைக்கின்றோம். ஆனால் இப்போட்டியில் தற்போது 3000 ரூபா விற்கு ஆகக் குறைந்த டிக்கட் வழங்கப்படுகின்றது. ஆடுகளத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலிலேயே இந்திய அணி தங்கியுள்ளது.
நாம் போட்டி நடைபெறுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியொருவர் இது தொடர்பாகக் கண்டறிவதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பினாலும், இது தொடர்பாகப் பார்த்திருக்கவில்லை. விரைவில் இது குறித்தும் விசாணையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ மேலும் விபரித்தார்.