Tamannaah: `எனக்கும் ராஷி கண்ணாவுக்கும் போட்டியா?' – தமன்னா அளித்த விளக்கம்

2006 ஆம் ஆண்டு ‘கேடி’ என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் உள்ள ‘காவாலா’ பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தார்.

தமன்னா, ராஷிகன்னா

இதனைத்தொடர்ந்து சுந்தர் சியின் அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார். படப்பிடிப்பின்போது இருவருக்கும் போட்டி நிலவியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா இதுதொடர்பாக பேசியிருக்கிறார்.

“ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தால் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டுப் பேசுவது வழக்கம். சிலர் இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்றும் பேசுவார்கள். என்னை பொறுத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும்.

தமன்னா

சினிமா துறையில் போட்டிகள் இருந்தாலும் நாம் நம்மை மாதிரியே நடித்தால் போதும். நானும், ராஷிகண்ணாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடித்தபோது ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் இருந்தோம். நடிகைகளுக்குள் ஆரோக்கியமான போட்டி இருந்தால் அது நல்ல விஷயம்தான்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.