மதுரை: புதிதாக பொறுப்பேற்கவுள்ள மத்திய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இதுவரை 2 லட்சம் மணி நேரம் ‘வந்தே பாரத்’, ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள மத்திய அரசின் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடக்கிறது. இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க சென்னை கோட்ட ரயில்வே பெண் ஓட்டுநர் (லோகோ பைலட்) ஐஸ்வர்யா எஸ்.மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா இதுவரை 2 லட்சம் மணி நேரம் ‘வந்தே பாரத் ’, ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கியுள்ளார்.
ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப் பெற்றுள்ளது. சென்னை – விஜயவாடா, சென்னை – கோவை பிரிவில் தொடக்க நாள் முதலே ‘வந்தே பாரத்’ ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.