டெல்லியில் நாளை முதல் டிரோன்கள் பறக்கத் தடை

புதுடெல்லி,

இந்திய ஜனநாயகத்தின் ஆட்சிப்பீடமாக விளங்குவது நாடாளுமன்றம். இந்த நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா 240 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்றிருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்திருந்ததால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவானது.இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சிஅமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. .உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கியது. இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஜனாதிபதியை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்க ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் நாளை முதல் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் மற்றும் பாரா கிளைடிங் போன்றவை பறக்கத் தடைஎன டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.