சென்னை: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், புகார்கள் மீது உடடினயாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ள மின்சாரத் துறை சாா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மின் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் காணொலிக் காட்சி மூலம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் […]