சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் தண்ணீர் – வைரலான வீடியோவால் சர்ச்சை

சீனாவின் மிக உயரமான மற்றும் வற்றாத யூண்டாய் நீர்வீழ்ச்சியில் (Yuntai), தண்ணீர் வரத்து முழுவதும் நின்றதால், குழாய் மூலம் தண்ணீர் நீர் அனுப்பப்படும் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று யூண்டாய் நீர்வீழ்ச்சி‌. இது சுமார் 1,024 அடி உயரம் கொண்டது. இதன் இயற்கை சூழ்ந்த அமைப்புக்கு ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் சீன மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதனாலேயே இந்த பூங்காவிற்கு சிறப்பு தரமதிப்பீடு சீன அரசின் சுற்றுலாத்துறையால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நீர்வீழ்ச்சியில் சமீப காலமாக நீர் வரத்து குறைந்துள்ளது. அதனால் குழாய் மூலம், தண்ணீர் இயற்கையாகவே விழுவதைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் மலையேறும் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில் “யூண்டாய் நீர்வீழ்ச்சியின் தொடங்கும் இடத்தைப் பார்ப்பதற்காக, கஷ்டப்பட்டு மலையேறிச் சென்றோம். அப்போது சீனாவின் உயரமான நீர்வீழ்ச்சிக்கு, பெரிய குழாய் ஒன்றால் நீர் வழங்கப்படும் காட்சியைப் பார்த்தோம். சில குழாய்கள் தான் யூண்டாய் நீர்வீழ்ச்சியின் ஆதாரம்.” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைராலாகியதைத் தொடர்ந்து , இது தொடர்பாக பூங்கா நிர்வாகம், யூண்டாய் நீர்வீழ்ச்சி பதில் கூறுவதைப் போலவே விளக்கம் அளித்தது. அதில்,”உங்கள் எல்லோரையும் இந்த நிலையில் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் மிகவும் அழகான வடிவத்தில் இருப்பேன் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. வறண்ட காலங்களில் மட்டுமே நான் ஒரு சிறிய மாற்று ஏற்பாட்டைச் செய்தேன். அதனால் எனது நண்பர்களான உங்களைச் சந்திக்கும் போது, நான் சிறந்த ஒன்றாக இருப்பேன்” என கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து அந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.