அஸ்வெசும நலன்புரி  செலுத்துவதனால் முதல் தடவையாக நாட்டிற்சமூக பாதுகாப்பு தரவுப் பொறிமுறையைப் பயன்படுத்த முடிந்தது …

அஸ்வெசும நலன்புரிப் பயனளிகளுக்கான கொடுப்பனவை செலுத்துவதன் காரணமாக நாட்டில் முதல் தடவை சமூகப் பாதுகாப்பு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முடிந்ததாக சமுர்த்தி, சிறு பொருளாதார, நுண்ணிதி சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச கடன் முகாமைத்துவ சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மற்றும் நலன்புரிப் பயன் சட்டம் என்பவற்றின் கீழ் சில கட்டளைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். 

 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையான சம்பந்தப்பட்ட நலன்புரி கொடுப்பனவுகளுடன் சம்பந்தப்பட்ட கொடுப்பனவு தற்போது வரை வழங்கப்பட்டுள்ள நலன்புரிப் பயனை எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

“அஸ்வெசும” சமூக நலன்புரி கொடுப்பனவு எனும் சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலம்புரி நிதி உதவிகள் ஜூலை மாதத்தில் இருந்து முறையாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விபரித்தார். 

பல வருடங்களாக நலனபுரி கொடுப்பனவிற்காக உருவாக்கப்பட்ட முறைமை ஒரு வருடத்தில் மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார். இவரிடத்தில் அஸ்வெசுமவிற்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நலன்புரி பயன் கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து வழங்கிய அமைச்சர்,

நாம் இந்த நலம்புரிச் சபையில் ஏதேதோ நடைமுறைகளை மாற்றப்பட்டன. நலன் குறி வழங்கும் போது பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டன. இவ்வாறு இந்த மென்பொருளில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. 

கெபித்திகொள்ளாவ போன்ற பிரதேசங்களுக்குச் சென்றால் அங்கு இணையதள வசதிகள் இல்லை.

அப்பகுதிகளில் மக்கள் பிரதேச செயலகங்களுக்கு சென்று தான் தமது அசசும விண்ணப்ப பத்திரங்களை வழங்கினார்கள். 

ஆனால் பொய் தகவல்களை வழங்கி சிலர் நலம்புரிகளை பெற்றுள்ளார்கள். ஆனால் இம்முறை ஒலிப்பதிவு ஒன்று பெற்றுக்கொள்ளப்படும். மேலும் சிலர் தமது பெயர்களில் வங்கிக் கணக்கு  வைத்திருக்கவோ ஆரம்பிக்கவோ இல்லை. 

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு காரணமாக முதல் தடவையாக நாட்டில் சமூக பாதுகாப்பு தரவு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு முடிந்தது. அதனால் நாட்டிலுள்ள வறுமைக் குழுவினரை அடையாளம் காண முடிந்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 அரசாங்க உர மானியம் வழங்கும் போது வங்கி கூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனையவற்றை மறுபுறம் நிதி உள்ளகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை குறைப்பதற்கு  முடிந்தது. 

அஸ்வெசும நலமன்புரி கொடுப்பனவின்போது ஏதேதோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் 40% ஆனவர்களுக்கு நான்கு கட்டங்களில் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.