முன்னாள் விண்வெளி வீரர் விமான விபத்தில் உயிரிழப்பு

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் (வயது 90). இவர் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார். அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது ‘எர்த்ரைஸ்’ புகைப்படத்தை எடுத்தவர்.

விண்வெளியில் இருந்து பூமியின் முதல் வண்ணப் புகைப்படம் இதுவாகும். மனிதர்கள் கிரகத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதை மாற்றியமைக்கும் நவீன வரலாற்றில் மிக முக்கியமான புகைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் விண்வெளியில் இருந்து பூமி எவ்வளவு மென்மையானது மற்றும் தனிமைப்படுத்தப்பட்டது என்பதைக் காட்டும் உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை தூண்டியதாக இந்த புகைப்படம் கருதப்படுகிறது.

இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார். அப்போது வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.