ஜூன் 9 ஆம் தேதி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதே மைதானத்தில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் சாதகமாக இருந்தால் ரன்கள் அடிப்பது இரு அணிகளுக்கும் கடினமாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, நியூயார்க் பிட்ச் குறித்து சில குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
சாதகமான பிட்ச் இல்லை
“பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஆடுகளத்தில் விளையாடுவோம் என்று எங்களுக்குத் தெரியாது. கியூரேட்டர்களுக்கே அதில் தெளிவு இல்லை. இந்தியா போன்ற மைதானங்களில் விளையாடிவிட்டு இது போன்ற மைதானங்களில் விளையாடுவது எவ்வளவு சிரமம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த நியூயார்க் ஆடுகளத்தில் சுதந்திரமாக விளையாட முடியும் என்று கனவிலும் நினைக்க கூடாது. பேட்ஸ்மேன்கள் கவனமாக இருக்க வேண்டும். பந்துகள் உங்களை தாக்க தயாராக வரும். உலகக் கோப்பையை விட பெரியதாக எதுவும் இருக்க முடியாது, நீங்கள் உடலில் என்ன அடி வாங்கினாலும் பொருட்படுத்த கூடாது. எனது அனுபவத்தைப் பயன்படுத்தி விளையாட விரும்புகிறேன்” என்று ஷர்மா கூறினார்.
நியூயார்க் பிட்ச் குறித்து ஐசிசி
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி மைதானத்தின் ஆடுகளம் தரமானதாக இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே ரசிகர்கள் மற்றும் நிபுணர்களின் விமர்சனத்தை கருத்தில் கொண்டு இன்றைய போட்டிக்கு முன்பு பிட்சில் சில மாற்றங்களை செய்ய உள்ளது ஐசிசி. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். தென்னாப்பிரிக்கா இலங்கையை 77 ரன்களுக்கும், இந்தியா நெதர்லாந்தை 103/9 ரன்களுக்கும் கட்டுப்படுத்தியது. மேலும் இந்த இரண்டு அணிகளும் சேஸிங்கில் சிரமப்பட்டனர்.
இந்தியாவின் பிளேயிங் 11
டி20 உலக கோப்பை 2024ன் முதல் போட்டியில் அயர்லாந்திற்கு எதிராக மாஸ் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தற்போது குரூப் ஏ புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அணி USAவிடம் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். எனவே அவர்கள் இன்னும் பலமாக வர வாய்ப்புள்ளது. மறுபுறம், அயர்லாந்திற்கு எதிரான வெற்றியுடன் இந்தியா களமிறங்க உள்ளது. டாஸ் வெல்வது இன்றைய போட்டியில் முக்கியமானதாக இருக்கும். காரணம் நியூயார்க் பிட்சில் சேசிங் செய்வது எளிதாக உள்ளது.
இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11
ரோஹித் ஷர்மா (c), விராட் கோலி, ரிஷப் பந்த் (wk), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் , ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தானின் உத்ததேச பிளேயிங் 11
பாபர் அஸம் (c), சைம் அயூப், முகமது ரிஸ்வான் (wk), உஸ்மான் கான், ஃபகர் ஜமான், இப்திகார் அகமது, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, முகமது அமீர், ஹரிஸ் ரவுஃப்