ICC T20 World Cup 2024: தற்போது ஐசிசி 2024 டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சிறப்பான வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்ய அயர்லாந்து அணியை 96 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 97 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் இன்று நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய மைதானமாக நியூயார்க் உள்ளது. எனவே பாகிஸ்தானின் முகம்மது அமீர், ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை இந்திய அணி வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் பலமாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் சிராஜ் ஆகியோர் அணிக்கு உதவக்கூடும். பேட்டிங் பொறுத்தவரை விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா கைகொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி வீரர்களின் ஒரு போட்டிக்கான சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய வீரர்களின் சம்பளம்
சமீபத்தில் பிசிசிஐ புதிய சம்பள விவரங்களை அறிவித்தது. அதன்படி ஒரு சீசனில் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. தற்போது பிசிசிஐ ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், சர்வதேச டி20 போட்டிகளுக்கு 3 லட்சமும் வழங்கி வருகிறது. மேலும் கிரேடு வகையில் ஆண்டு சம்பளமும் வீரர்களுக்கு கொடுக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் சமீபத்தில் நீக்கப்பட்டனர்.
கிரேடு A+ (ரூ. 7 கோடி) : ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
கிரேடு A (ரூ 5 கோடி) : ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த் மற்றும் அக்சர் படேல்.
கிரேடு B (ரூ 3 கோடி) : சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்
கிரேடு C (ரூ. 1 கோடி) : உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத்