மே 2024 மாதந்திர விற்பனை எண்ணிக்கை விபரம் வெளியானதை தொடர்ந்து மாருதி சுசூகி முதலிடத்தில் சுமார் 1,44,002 கார்களை விநியோகித்துள்ள நிலையல், சில நிறுவனங்களோ சில மாடல்களின் விற்பனை எண்ணிக்கையை எட்ட இயலாத நிலையில் மிகவும் குறைவாக 5,000க்கு குறைந்த விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
இந்தியாவில் ஜீப் நிறுவனம் வெறும் 344 எஸ்யூவிகளை மட்டும் விற்பனை செய்துள்ள நிலையில், சிட்ரோயன் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உட்பட மூன்று கார்களை பெற்றிருந்தாலும் குறைவான டீலர் எண்ணிக்கையின் காரணமாக வெறும் 515 யூனிட்டுகளை மட்டும் விற்றுள்ளது.
அடுத்தப்படியாக, ஒரே மாடலை பெற்றுள்ள நிசான் நிறுவன மேக்னைட் 2,211 எண்ணிக்கையிலும், ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு நிறுவனமும் முறையே 2,884 மற்றும் 3,273 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
ரெனோ இந்தியா 3,709 எண்ணிக்கை, எம்ஜி மோட்டார் 4,769 ஆகவும் மற்றும் ஹோண்டா கார்ஸ் நிறுவனமும் 4,822 ஆக பதிவு செய்துள்ளது.
மே 2024 கார் விற்பனை நிலவரம் அட்டவனையில்
வ.எண் | தயாரிப்பாளர் | மே 2024 | மே 2023 |
---|---|---|---|
1 | மாருதி சுசூகி | 1,44,002 | 1,43,708 |
2 | ஹூண்டாய் | 49,151 | 48,601 |
3 | டாடா | 46,700 | 45,880 |
4 | மஹிந்திரா | 43,218 | 32,883 |
5 | டொயோட்டா | 23,959 | 19,379 |
6 | கியா | 19,500 | 18,766 |
7 | ஹோண்டா | 4,822 | 4,660 |
8 | எம்ஜி | 4,769 | 5,006 |
9 | ரெனால்ட் | 3,709 | 4,625 |
10 | ஃபோக்ஸ்வேகன் | 3,273 | 3,286 |
11 | ஸ்கோடா | 2,884 | 3,547 |
12 | நிசான் | 2,211 | 2,618 |
13 | சிட்ரோயன் | 515 | 86 |
14 | ஜீப் | 344 | 734 |
மே 2024 மாதாந்திர விற்பனையிலும் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் 42 சதவீதத்திற்கும் கூடுதலான சந்தை மதிப்பைக் கொண்டிருக்கின்றது அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் விளங்குகின்றது.