மொஹாலி: நடிகை கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக மொஹாலியில் பல்வேறு விவசாய அமைப்புகள் பேரணி நடத்தினர்
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்ததாக வெளியான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான நிலையத்தில் பணியிலிருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் பல்வேறு விவசாய அமைப்புகள் பேரணி நடத்தினர். விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு கங்கனா தெரிவித்த கருத்துகளுக்கு பேரணியில் கலந்து கொண்ட விவசாய அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
பஞ்சாபில் தீவிரவாதம் தலைதூக்கியிருப்பதற்கு இந்த சம்பவமே சான்று என கங்கனா தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். மேலும் கங்கனாவின் குழுவைச் சேர்ந்த ஒருவர் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியானது தொடர்பாக, அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
A march for Kulvinder Kaur
Nothing this magnificent and disciplined has been seen before.
Thousands of farmers are marching to the SSP Office in Mohali, demanding justice for their sister, Kulvinder Kaur. pic.twitter.com/iHgfFUGJmp
— زماں (@Delhiite_) June 9, 2024