பாகிஸ்தானை அழ வைத்த இந்திய அணி! ரோஹித் செய்த மேஜிக் இதுதான்!

India vs Pakistan: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்கு கடும் சவால்களை முன்வைத்தனர். பிட்ச் ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிய நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு இந்திய டாப் ஆர்டரை முடிவுக்கு கொண்டு வந்தது.

19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 13 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 19-2 என்று நிலையில் இருந்த போது, ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடினர். பவர் பிளேயை நன்றாக பயன்படுத்திய இந்த ஜோடி 39 ரன்களை சேர்த்தனர். அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். சூர்யகுமார், துபே, ஹர்திக், ஜடேஜா என தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 42 ரன்கள் அடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவதற்கு முன்பே 19வது ஓவரில் இந்திய அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரோஹித் சர்மாவின் மாஸ்டர் பிளான்

மிகவும் எளிதான இலக்கை எதிர்த்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் நன்றாக அமைந்தது. பவர் பிளேயில் முதல் 4 ஓவர்களில் விக்கெட்களை இழக்காமல் இருந்தது. ஆனால் பும்ரா பந்து வீச துவங்கியவுடன் போட்டி தலைகீழாக மாறியது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். அங்கிருந்து பாகிஸ்தான் அணிக்கு சரிவு ஆரம்பமானது. ஹர்திக் பாண்டியா, சிராஜ், அர்ஷ்தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். கேப்டன் ரோஹித் சர்மா சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தினார். குறிப்பாக பும்ராவின் ஓவர்களை சிறப்பாக கையாண்டார். 14வது ஓவரில் பும்ரா ரிஸ்வானின் விக்கெட்டை எடுத்தது திருப்பு முனையாக மாறியது. 4 ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் பும்ரா. இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

Naseem Shah in tears after Pakistan’s loss.#INDvPAK | #T20WorldCup pic.twitter.com/eSJUNPi2xF

— Grassroots Cricket (@grassrootscric) June 9, 2024

அழுதுகொண்டே வெளியேறிய பாகிஸ்தான்

இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா மைதானத்திலேயே கண்ணீர் விட்டார். இந்திய அணி பேட்டிங் பிடிக்கும் போது 100% பாகிஸ்தான் தான் இந்த போட்டியில் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ரிஸ்வான் விக்கெட் விழுகும் வரை இந்திய ரசிகர்களும் இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். இது வெற்றியை இந்தியா பக்கம் திருப்பியது. இதன் காரணமாக எளிதாக போட்டியை தோற்ற சோகத்தில் நசீம் ஷா கண்ணீர் விட்டார். அவருக்கு அப்ரிடி ஆறுதல் கூறி கொண்டு பெவிலியின் திருப்பினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.