இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுடன் முதல் தடவையாக போட்டியிட்ட நாசு கவுண்டி மைதானம் தரமானதாக இல்லை என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணி 16 ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாட வேண்டியிருந்தது. பின்னர் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இங்கு நடைபெற்றது. அயர்லாந்து 96 ஓட்டங்களை பெற்றது. ஆனால், பலம் வாய்ந்த துடுப்பாட்டக்காரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு இந்த மட்டத்தை அடைய 10 ஓவர்கள் கடந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை, நாசு கவுண்டி மைதானம் எதிர்பார்த்தளவு இல்லையென்றாலும், எதிர்வரும் போட்டிகளுக்கு வழங்கக்கூடிய அதியுயர் மட்ட ஆடுகளங்களை வழங்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ணத் தொடரின் கீழ் மேலும் ஆறு போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது