மன்னார் மாவட்டத்தில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சிகள் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (10) ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்தின் 5 பிரதேச செயலகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 35 கிராம அலுவலர்களுக்கான 03 மாதகால பயிற்சி இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும், நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு 12 பேரும், முசலி பிரதேச செயலத்துக்கு 7பேரும், மடு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு 2 பேரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.