தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம். நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்குத் தரவேண்டுமெனக் கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்” என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்குச் சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் […]