ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்தி.
இப்போது ’96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமாரின் ‘மெய்யழகன்’, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என இரண்டு படங்களும் நிறைவடைந்து விட்டதால், அடுத்து ‘சர்தார் 2’வுக்கு ரெடியாகியிருக்கிறார் கார்த்தி.
கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தை ஜோதிகா- சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஶ்ரீதிவ்யா, ராஜ்கிரன், ஸ்வாதி கொன்டே, இளவரசு என பலர் நடிக்கின்றனர். ’96’ கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. டப்பிங், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கின்றன. ரிலீஸ் தேதி முடிவானதும், படத்தின் முதல் சிங்கிள் லிரிக் வீடியோவை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜல்லிக்கட்டு காளையுடன் கார்த்தி இருக்கும் படம் வரவேற்பைப் பெற்றதுடன் இது ஜல்லிக்கட்டு தொடர்பான படமாக இருக்குமோ என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் படத்தில் ஒரு பகுதி மட்டுமே ஜல்லிக்கட்டு இருக்கிறது என்றும், முக்கிய கதை வேறு எனவும் சொல்கின்றனர்.
இன்னொரு படமான ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கும் இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடிக்கின்றனர். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசை. இம்மாதத்தோடு இதன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்றும்,
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது என்றும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். இதனை அடுத்து ‘கைதி2’, ‘தீரன் அதிகாரம் இரண்டு’ என பார்ட் 2 சீக்குவெல்கள் இருக்கின்றன. இதில் ‘மெய்யழகன்’ படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.