சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `நாதஸ்வரம்’. இந்தத் தொடரில் நாயகியாக நடித்து மக்களிடையே பரிச்சயமானவர் ஸ்ரித்திகா.
இவர் `மகராசி’ தொடரில் இவருடன் கதாநாயகனாக நடித்திருந்த எஸ்எஸ்ஆர் ஆர்யனைத் திருமணம் செய்திருக்கிறார். அது தொடர்பாக ஸ்ரித்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில்,
‘சில ஆண்டுகளுக்கு முன்னதாக நானும், ஆர்யனும் எங்களுடைய திருமண வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தோம். நாங்கள் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தவிர, எங்களுடைய கடந்த வாழ்க்கை குறித்த எந்த நெகட்டிவிட்டியையும் பகிர விரும்பவில்லை. நட்பும் புரிதலும் எங்களுடைய அடுத்தக்கட்ட நகர்விற்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உங்களுடைய சப்போர்ட்டினாலும் எங்களுடைய பெற்றோர்களின் ஆசிவாதத்தினாலும் நாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்திருக்கிறோம். தொடர்ந்து உங்களுடைய அன்பையும், ஆதரவையும் எங்களுக்குக் கொடுங்கள். சீக்கிரம் இது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்கிறோம்.
அதே போல, ஸ்ரித்திகா சனேஷ் என இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயர் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அது இன்ஸ்டாகிராமில் டெக்னிக்கல் பிரச்னையால் சரிசெய்ய முடியவில்லை. அதனையும் விரைவில் சரி செய்துவிடுவேன். நன்றி!’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
`மகராசி’ தொடருக்குப் பிறகு இருவரும் சேர்ந்து தொடர்ந்து வீடியோக்கள் பகிர்ந்து வந்தனர். பலரும் நீங்கள் காதலிக்கிறீர்களா? எனக் கேட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். வாழ்த்துகள் ஸ்ரித்திகா – ஆர்யன்!