`உன் அண்ணனைப்போல நீ அழகாக இல்லை' – கமென்ட்டால் வருத்தப்பட்ட மகள், ட்விங்கிள் கன்னா பகிர்ந்த அனுபவம்

நடிகை ட்விங்கிள் கன்னா, அக்ஷய் குமாரை கரம் பிடித்த பின்பு தனது திரைத்துறை பயணத்தில் இருந்து விடைபெற்று எழுத்தின் பக்கம் திரும்பியவர்.

நடிகையாக விடைபெற்றாலும் எழுத்தாளராக `Mrs Funnybones’ என்ற புத்தகத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவருக்கு ஆரவ், நிதாரா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், தன் மகள், ‘அண்ணனைப் போல அழகாக மாற வேண்டும்’ என்று கூறி நீச்சல் பயிற்சியைத் தொடர விரும்பாத நிகழ்வு குறித்து அவரின் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Nitara

அதில், ஒரு நாள் ட்விங்கிள் கன்னாவின் மகள் நீச்சல் பயிற்சிக்குச் செல்ல விரும்பாமல் நிறுத்தியது பற்றி பகிர்ந்துள்ளார். சிறுமி, நிறம் கறுத்துப் போயிருக்கிறார் (tan). உறவினர் ஒருவர் சிறுமியை, `அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். ஆனால், அவள் சகோதரனைப் போல அழகாக இல்லை’ என்று கமென்ட் செய்திருக்கிறார். இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட நிதாரா, தன் அண்ணனைப் போல அழகாக மாற வேண்டும் என கவலைப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பகிர்ந்திருக்கும் ட்விங்கில் கன்னா, ‘நம்முடைய பிரச்னைகளுக்கு புத்தகத்தின் வாயிலாக தீர்வுகளைத் தேட ஆரம்பித்துவிட்டால் போதும். அனைத்தையும் கடந்து விடலாம்’ என்று கூறி, தன் மகளுக்கு ஃப்ரிடா காலோவின் (Frida Kahlo) வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.   

ஃப்ரிடா காலோ, ஒரு மெக்சிகன் ஓவியர். சமரசமற்ற, வண்ணமயமான சுய உருவப்படங்கள் (self-portraits) வரைவதில் பிரபலமானவர். 

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, சிறுமியின் மனநிலை மாறியுள்ளது. அவர், தற்போது அண்ணனைப் போல சன் பிளாக் பயன்படுத்துவதில்லை. `வெள்ளை ஒரு லைட் கலர், அதனால் அது என் டி- ஷர்ட்டைப் போல வேகமாக அழுக்காகிறது. பிரவுன் கலரானது டார்க்காக இருக்கிறது. அதனால் அது அப்படியாவதில்லை’ என்று கூறியுள்ளார். 

Twinkle Khanna – Nitara

இப்போது மகளும் அம்மாவும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 பக்கங்கள் படிப்பது, மற்றும் புத்தகத்தை சிறுகுறிப்பு எடுப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்களைச் செய்து போட்டி போட்டுப் படிக்கிறார்கள்.

தானும் மகளும் புரியாத வார்த்தைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, சிறந்த பத்திகள் மற்றும் சிறந்த உருவகங்களைக் குறிப்பெடுப்பதில் போட்டியிட்டுக்கொள்வது பற்றியும் பகிர்ந்துள்ளார் ட்விங்கில் கன்னா.

இந்த டிஜிட்டல் உலகத்தில் கமென்டுகள் எந்தளவு பிறரின் மனதை சங்கடப்படுத்தும் என்று யாரும் யோசிப்பதில்லை. மாறாக அதனைக் கடக்கும் மனநிலையைப் பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.