புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் 4வயது சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைகாய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது மிகவும் அரிதான வைரஸ். இந்தியாவில் முதன்முறையாக இந்த வைரஸ் பாதிப்பு 2019-ம்ஆண்டு கண்டறிப்பட்டது. இந்நிலையில் தற்போது 2-வது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் 4 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில்கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு H9N2 இன்புளுயென்சா வைரஸ் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அச்சிறுவன் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பியுள்ளான். இந்த வைரஸ், சுற்றுப்புறத்தில் உள்ளகோழிப்பண்ணை மூலம் சிறுவனை பாதித்துள்ளதாக தெரிகிறது. அச்சிறுவனின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் பாதிப்புஇல்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு குறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.