5 ஸ்டார் ரேட்டிங்… பாதுகாப்பில் பட்டையை கிளப்பும் இந்த டாடா கார் – நம்பி வாங்கலாம் போலையே!

Tata SUV Cars Safety Rating: இந்தியாவில் கார்களின் வருகையைும் விற்பனையும் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது எனலாம். பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயங்கும் EV கார்கள், பெட்ரோல் – EV மூலம் இயங்கும் Hybrid கார்கள் என பல வகை கார்கள் இந்திய சந்தையில் பட்டையை கிளப்புகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கார்கள் அப்டேட்டாகி வருகின்றன.

தற்போதைய சூழலில், EV மற்றும் Hybrid கார்கள் மக்களிடம் நல்ல கவனத்தை பெற்றுள்ளன. சுற்றுச்சூழலுக்கு பெரியளவில் மாசு ஏற்படுத்தாது என்பது ஒருபுறம் இருக்க, அதை ஓட்டும்போது கிடைக்கும் அனுபவமும் ஒரு முக்கியமான காரணமாகும். அந்த வகையில், இதுபோன்று பல விஷயங்களை கார் வாங்கும் முன் ஒரு வாடிக்கையாளர் நிச்சயம் யோசிப்பார். அவரது பட்ஜெட், அதன் காரின் மைலேஜ், அதன் சர்வீஸ் விஷயங்கள் ஆகியவை இதில் முக்கியமாக கவனிக்கப்படுபவை. 

5 ஸ்டார் ரேட்டிங்

அதே வேளையில் இந்த காலகட்டத்தில் பலரும் புதிய கார்களை வாங்கும் முன் கவனிப்பது என்னவென்றால், அந்த குறிப்பிட்ட கார் ஆனது பாதுகாப்பு அம்சத்தில் என்ன ரேட்டிங்கை பெற்றிருக்கிறது என்பதுதான். அதன் ரேட்டிங் எப்படி உள்ளது, அந்த காரில் விபத்து ஏற்பட்டால் வரும் உயிர் காக்கும் அம்சங்கள் இருக்கின்றனவா ஆகியவற்றை மக்கள் நிச்சயம் கவனிப்பார்கள். எனவே, ஒவ்வொரு காரும் அதனை மனதில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன. 

அந்த வகையில் டாடாவின் முக்கியமான கார் ஒன்று தற்போது இந்த பாதுகாப்பு அம்சம் சார்ந்த சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அது என்ன கார், அது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற என்ன காரணம், அதன் பிற அம்சங்களை இங்கு சற்று விரிவாக காணலாம். முதலில் கார்களின் பாதுகாப்பு அம்சம் குறித்த ரேட்டிங் Global NCAP மூலம் வெளியாகும். அதேபோல், இதனை Bharat NCAP வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் டாடா நிறுவனத்தின் EV கார்களிலேயே பட்ஜெட்டில் கிடைக்கும் SUV கார் Tata Punch.ev தான். இந்த கார்தான் பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. Tata Punch.ev மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் மற்ற மூன்று SUV கார்களும் பாதுகாப்பு அம்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. அவை, Nexon.ev, Harrier, Safari ஆகும். 

பட்டையை கிளப்பும் Tata Punch.ev

இதில் Punch.ev, Nexon.ev, Harrier, Safari ஆகியவை பெரியோர்களுக்கான பாதுகாப்பு பிரிவிலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதில் மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டாடாவின் நான்கு கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருந்தாலும், Nexon.ev, Harrier, Safari ஆகிய கார்கள் பெற்ற புள்ளிகளை விட Punch.ev அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதன்மூலம், Punch.ev கார் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது எனலாம். 

பெரியார்களுக்கான பாதுகாப்பில் மொத்தம் 32க்கு 31.46 புள்ளிகளை Punch.ev கார் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் Safari மற்றும் Harrier கார்கள் இரண்டும் தலா 30.08 புள்ளிகளையும், Nexon.ev கார் 29.86 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றன. அதேபோல், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் மொத்தமுள்ள 49 புள்ளிகளில் Punch.ev கார் 45 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதில் Nexon 44.95 புள்ளிகளையும், Safari மற்றும் Harrier கார்கள் தலா 44.54 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

Tata Punch.ev – முக்கிய அம்சங்கள்

Tata Punch.ev காரின் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சம் ஆகும். மேலும், இது ஷோ-ரூம் செலவுகள் இன்றியே ரூ.15.49 லட்சம் வரை விற்பனையாகிறது. மேலும், இந்திய சந்தையில் இதற்கு என நேரடியான போட்டியே இல்லை என்பதும் கூடுதல் சிறப்பாகும். Tata Punch.ev காரில் இரண்டு வேரியண்ட் உள்ளது. குறிப்பாக, ஸ்டாண்டர்டு வேரியண்டில் 60kW மோட்டார் உள்ளது. இதில் 114Nm பவர் கிடைக்கும். 25kWh பேட்டரி இதில் இருக்கும். இதனை முழுமையாக சார்ஜ் செய்து, முழுமையாக ஓட்டினால் 315 கி.மீ., வரை செல்லும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் லாங் வேரியண்டில் 90kW மோட்டார் உள்ளது, இதில் 190Nm பவர் கிடைக்கும். 35kWh பேட்டரி இதில் இருக்கும், இதனை முழுமையாக ஓட்டினால் 421 கி.மீ., வரை செல்லும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகல – மக்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.