பஞ்ச்.இவி காரின் கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் வழங்கிய BNCAP

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்சின் பஞ்ச்.இவி காரினை பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட முடிவில் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு என இரண்டிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

பார்த் கிராஷ் டெஸ்டில் சோதனை செய்யப்பட்ட நெக்ஸான்.இவி போல பஞ்ச் எலக்ட்ரிக் காரும், அதிகபட்சமாக வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 32 புள்ளிகளை பெறுவதற்கு 29.86 புள்ளிகளை பெற்று 5 நட்சத்திரம் மதிப்பீட்டை வயது வந்தோர் பிரிவில் நெக்ஸானது பெற்றிருக்கின்றது முன்புற ஆப்செட் மோதல் மற்றும் பேரியர் டெஸ்டில் ( Deformable Barrier Test) பெறவேண்டிய 16 புள்ளிகளுக்கு 14.26 புள்ளிகளை பெற்றும், இறுதியாக நகரும் பேரியர் (Movable Deformable Barrier Test) கொண்டு சோதனை செய்யப்பட்டதில் 16 புள்ளிகளுக்கு 15.6 புள்ளிகளை பெற்று அனைத்து விதமான மோதல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொடர்பாக சோதனை செய்யப்பட்டதில் பெறவேண்டிய 24 புள்ளிகளுக்கு 23.95 புள்ளிகள் பெற்றுள்ளது மேலும் இதனுடைய சைல்ட் ரெஸ்டின் சிஸ்டம் (Child Restraint System) 12க்கு 12 பெற்று அசத்தியுள்ளது. vehicle assessmentல் 12 புள்ளிகளுக்கு 9 புள்ளிகளை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.