வாட்ஸ்அப் அப்டேட்: தமிழ் மொழியில் பேசினால் ஆங்கிலத்துக்கு மாற்றும் வசதி விரைவில்..!

வாட்ஸ்அப் புதிய அப்டேட்

ஏஐ வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகள் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து அசரடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொழில்நுட்ப அற்புதங்களை எல்லாம்  யூசர்கள் ஈஸியாக பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர இருக்கிறது.

தமிழ் டூ ஆங்கிலம் ஈஸி

அதில் வாய்ஸ் நோட், சாட்டிங் உள்ளிட்டவைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பிக் கொள்ள முடியும். அதற்காக, மொழி தெரியவில்லையே என்ற கவலை பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த மொழியில் வாய்ஸ் நோட் மற்றும் சாட்டிங் உருவாக்கி, அதனை விரும்பும் மொழிக்கு மாற்று என்ற ஆப்சனை கொடுத்துவிட்டால் அந்த வேலையை வாட்ஸ்அப் பார்த்துக் கொள்ளும்.

கட்டணம் ஏதும் இல்லை

முதல்கட்டமாக போர்ச்சுகீஸ், அங்கிலம், ரஷ்யம், ஸ்பானிஸ் போன்ற மொழி சேர்க்கப்பட்டுள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை இந்தி மொழி இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளதாம். பிராந்திய மொழிகளைப் பொறுத்தவரை விரைவில் படிப்படியாக விரிவாக்கம் செய்ய வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த புதிய வசதியை பயன்படுத்திக்கொள்ள கட்டணம் எல்லாம் தேவையில்லை. ஆனால் கூடுதலாக சில டேட்டாக்களை மட்டும் டவுன்லோடு செய்ய வேண்டியிருக்குமாம். அதேநேரத்தில் இந்த அப்டேட் டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுமானவரை சோதனை முயற்சிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

அதேபோல் ஆண்ட்ராய்டு யூசர்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக இந்த அப்டேட் வடிவமைத்து வருகிறது வாட்ஸ்அப். அதன்பிறகு ஐஓஎஸ் யூசர்களுக்கு கிடைக்கும். பாதுகாப்பு விஷயத்திலும் வாட்ஸ்அப் வொர்க் செய்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் 71 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டுள்ளது. யூசர்களின் குற்றச்சாட்டு மற்றும் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.