பஜாஜ் ஆட்டோவின் குறைந்த விலையில் கிடைக்கின்ற பல்சர் 125 மோட்டார்சைக்கிளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ரூ.92,883 ஆரம்ப விலையில் (எக்ஸ்ஷோரூம்) துவங்குகின்றது.
பல்சர் NS125 பைக்கினை தொடர்ந்து மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் மூலம் பெரிய 125 எழுத்துருவினை பெற்றுள்ள பல்சர் 125 மாடலில் 124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 hp 8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு, 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மொபைல் சிகனல், பேட்டரி இருப்பு, கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன.
2024 Bajaj Pulsar 125 carbon fibre single seat – ₹ 92,883/-