2 நாள்களாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, தொடர்ந்து இரண்டு நாள்களாக அவரது மைனர் காதலன் உட்பட ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி, மைனர் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் காதலன் ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சிறுமியை தன்பாத் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து துஹாதண்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான். பிறகு ஒரு நண்பருடன் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பின்னர் அச்சிறுமியை, ஒரு அறையில் பூட்டிவைத்து, மறுநாள் மாலை அதாவது ஜூன் 10-ம் தேதியில் வேறு ஐந்து நண்பர்களுடன் வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு புதரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவத்தை வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். பிறகு, சிறுமி உதவிக்காக அழுத போது சத்தத்தினைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் சிறுவர்கள் தப்பி ஓடிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி, விசாரணையில் கூறினார்.

தகவல் அறிந்த பின், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடும் பணியைத் தொடங்கினர். பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலன் உட்படக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையப் பொறுப்பாளர் மனோஜ் பாண்டே தெரிவித்தார். ஆறு பேரில், இருவர் சிறார்கள் என்றும், மீதமுள்ள நான்கு பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் கூறினார். மேலும் அவர்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

கைது

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும், தனது இளைய சகோதரி பீகாரில் தனது மாமாவுடன் வசித்து வருவதாகவும் கூறினார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய விவரங்களை வழங்குமாறு வற்புறுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஆனால் சிறுமி ஒத்துழைக்கவில்லை என்றும் காவல்துறையினர் கூறினர். விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், “இப்போது, சிறுமியின் விவரங்களைப் பெற, குற்றம்சாட்டப்பட்ட காதலனிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.