பாரத் NCAP வெளியிட்ட டாடாவின் இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவி கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் இருந்து நிசானின் 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி மாடலின் முன்புற தோற்றத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக வெளியாகியுள்ளது.
சில மாதங்களாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற மேக்னைட் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்ற நிசான் நிறுவனம் பாரத் கிராஷ் டெஸ்டிற்கு அனுப்பியுள்ள மாடலின் மூலம் முன்பக்கத்தில் பம்பர் புதுப்பிக்கப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முன்பாக GNCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விற்பனையில் உள்ள மாடல் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருந்த நிலையில், புதிய மாடலின் தரம் மற்றும் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகளை 2024 ஆம் ஆண்டிற்கான மேக்னைட் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்றபடி, என்ஜின் ஆப்ஷனில் எந்தவொரு மாற்றங்களும் இருக்காது. 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கும் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் உள்ளது.
அடுத்து, 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள பல்வேறு போட்டியாளர்கள் ரெனோ கிகர், டாடா நெக்சான், ஹூண்டாய் வெனியூ, சொனெட், பிரெஸ்ஸா, XUV 3XO உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
உதவி – x.com/theyawninchihua