மணிப்பூரில் நடந்த கலவரம் மத ரீதியிலானது அல்ல: கேரள கத்தோலிக்க திருச்சபை கருத்து

திருவனந்தபுரம்: மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. இரண்டு பழங்குடி இனங்களுக்கு இடையிலான மோதல் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலி யோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மக்களை சமமாக மதித்துஅவர்களது நலனை உறுதி செய்பவரே உண்மையான ஆட்சியாளர்.சமயசார்பின்மை என்பதே இந்தியாவின் தனிப்பெரும் அடையாளமாகும். கண்மணியைக் காப்பது போன்று சமயசார்பின்மையை புதிய மத்திய அரசு பாதுகாக்கும் என்று இந்த திருச்சபை உறுதியாக நம்புகிறது. ஏற்கெனவே மணிப்பூரில் நிகழ்ந்ததுபோன்ற துயரகர சம்பவம் இனி நிகழாதவண்ணம் மத்திய அரசு சீரிய முயற்சிகள் எடுக்கும் என்றே நம்புகிறோம். சுரேஷ் கோபி மற்றும்ஜார்ஜ் குரியன் ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது கேரள மாநிலத்தை மோடி அரசு அங்கீகரித்திருப்பதைக் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல. அது இரு வேறு பழங்குடியின குழுக்களுக்கு இடையில் மூண்ட மோதலாகும்” என்று மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாசெலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ் (மூன்றாம்) கூறியதாகச் சொல்லப்படுகிறது.

மோடி அரசுக்கு ஆதரவு: முன்னதாக, மணிப்பூர் கலவரத்துக்கு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபை குற்றம்சாட்டியது. ஆனால், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி கொண்டு புதிய பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, மணிப்பூர் விவகாரம் மதக்கலவரம் அல்ல என்று கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.