ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலம் சசரத்துக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம் போல நேற்று மாலை 5 மணியளவில் ரயில் புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயில் தீ பற்றியதாக ரயில் ஒட்டுநருக்கு செல்போனில் தகவலளிக்கப்பட்டிருக்கிறது. அதை நம்பிய ரயில் ஓட்டுநர் ரயிலை குமண்டி ரயில் நிலையத்தில் நிறுத்தினார். இந்த தகவல் வேகமாக ரயில் பயணிகளிடம் பரவியதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பயணிகள் பலர் ரயிலிருந்து குதித்து தப்பிக்கவும் முயன்றிருக்கிறார்கள்.
அப்போது மற்றொரு பக்கத்திலிருந்து வந்த சரக்கு ரயில் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் மூன்று பயணிகளின் உடல் தற்போதுவரை மீட்கப்பட்டிருக்கிறது. பலர் காயமடைந்திருக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரித்து வருகிறது. உண்மையில் ரயிலில் தீ பற்றவில்லை. ரயில் ஓட்டுநருக்கு தொலைபேசியில் அழைத்தவர் பயணியுமல்ல.
அந்தப் பகுதியில் நக்சல் அமைப்புகளின் செயல்பாடு தீவிரமாக இருப்பதால், இந்த சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா…. அல்லது யாரேனும் விளையாட்டுக்கு இப்படி செய்தார்களா என்றக் கோணத்தில் விசாரித்து வருகிறது காவல்துறை. வதந்தி எந்த ரூபத்தில் பரப்பப்பட்டாலும் ஆபத்துதான் என இந்த சம்பவம் உணர்த்துகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88