What to watch on Theatre and OTT: மகாராஜா, Grrr, Chandu Champion – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மகாராஜா (தமிழ்)

மகாராஜா

‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Grrr (மலையாளம்)

Grrr

ஜெய்.ஆர்.கிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், சுராஜ் வெஞ்சாரமூடு, அனகா மருதோரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Grrr’. மதுபோதையில் இருப்பவருக்கும், சிங்கத்திற்கும் இடையே நடக்கும் அலைப்பறைகளை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

DNA (மலையாளம்)

DNA

டி.எஸ்.சுரேஷபாபு இயக்கத்தில் லட்சுமி ராய், பாபு ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘DNA’. போலீஸ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Harom Hara – The Revolt (தெலுங்கு)

Harom Hara – The Revol

ஞானசாகர் இயக்கத்தில் சுதிர் பாபு, மால்விகா ஷர்மா, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Harom Hara – The Revolt’. ஆக்‌ஷன், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

kotee (கன்னடம்)

Kotee

பரமேஸ்வர் இயக்கத்தில் தனன்ஜெயா, மோக்‌ஷா குஷால், தனுஜா வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kotee’. திரில்லர் திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Chandu Champion (இந்தி)

Chandu Champion

கபீர் கான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், விஜய் ராஸ், ராஜ் பல் யாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Chandu Champion’. தடகள வீரர் சந்துவின் வாழ்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Inside Out 2 (ஆங்கிலம்)

Inside Out 2

மெக் லேஃபாவே எழுத்தில் கென்சிங்ட்ண்ட் டால்மன், அனன்யா பாண்டே (இந்தி வெர்ஷன்), ஆமி போஹ்லர், மாயா ஹாக் உள்ளிட்டோர் குரலில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் ‘Inside Out 2’. இத்திரைப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Watchers (ஆங்கிலம்)

The Watchers

இஷானா நைட் ஷியாமாலன் இயக்கத்தில் டகோட்டா ஃபேன்னிங், ஜார்ஜினா காம்ப்பெல், ஓல்வென் ஃபூரே உள்ளிட்டோர் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Watchers’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி

Rush (தெலுங்கு) – ETV win

Rush

சதீஷ் போலோஜு இயக்கத்தில் ரவிபாபு. கார்த்திக் அக்ருஹி, யாதகிரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Rush’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஜூன் 13ம் தேதி ‘ETV win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Luv Ki Arrange Marriage (இந்தி)

Luv Ki Arrange Marriage

இஷ்ரத் ஆர்.கான் இயக்கத்தில் அன்னு கபூர், அவ்னீத் கவுர், கீதிகா மெஹந்த்ரு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Luv Ki Arrange Marriage’. திருமண விழாவை மையமாக வைத்து நடக்கும் ஜாலியான இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Maharaj (இந்தி) – Netflix

Maharaj

மல்ஹோத்ரா பி. சித்தார்த் இயக்கத்தில் ஜுனைத் கான், ஜெய்தீப் அஹ்லாவத், ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Maharaj’. கோர்ட் ட்ராமா திரைப்படமான இது ஜூன் 14ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என வழக்குப் போடப்பட்டிருப்பதால் இதன் ரிலீஸ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Ultraman: Rising (ஆங்கிலம்) – Netflix

Ultraman: Rising

ஷானன் டிண்டில், ஜான் ஆஷிமா ஆகியோர் இயக்கத்தில் கிறிஸ்டோபர் சீன், ராப் ஃபுகுசாகி, ஹிரோ நகமுரா உள்ளிட்டோர் உருவாக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் ‘Ultraman: Rising’. ஆக்‌ஷன், அட்வன்சர், அனிமேஷன் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்கள்

Gaanth Chapter 1: Jamnaa Paar (இந்தி) – Jio Cinema

Gaanth Chapter 1: Jamnaa Paar

கனிஷ்க் வர்மா இயக்கத்தில் மானவ் விஜ், மோனிகா பன்வார், சலோனி பத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Gaanth Chapter 1: Jamnaa Paar’. துப்பறியும் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Jio Cinema’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Boys (Season 4) (ஆங்கிலம்) – Amazon Prime Video

The Boys (Season 4)

எரிக் கிரிப்கே ஆக்கத்தில் கார்ல் அர்பன், ஜாக் குவைட், ஆண்டனி ஸ்டார், எரின் மோரியார்டி, ஜெஸ்ஸி டி. அஷர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர்ஹீரோ வெப்சீரிஸ் ‘The Boys’. உலகப் புகழ்பெற்ற இந்த சீரிஸின் நான்காவது சீசனின் முதல் மூன்று எபிசோடுகள் தற்போது வெளியாகியுள்ளன. அட்வென்சர், ஆக்‌ஷன், திரில்லர் வெப்சீரிஸான இது ‘Amazon Prime Video’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Yakshini (தெலுங்கு) – Disney + Hotstar

Yakshini

தேஜா மார்னி இயக்கத்தில் வேதிகா, அஜய், தயானந்த் ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Yakshini’. ஹாரர் திரில்லர் வெப்சீரிஸான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Paruvu (தெலுங்கு) – Zee5

Paruvu

பவன் சதினேனி, சித்தார்த் நாயுடு, ராஜசேகர் வட்லபதி ஆகியோர் இயக்கத்தில் நரேஷ் அகஸ்தியா, நிவேதா பெத்துராஜ், மொயின், நாகபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Paruvu’. க்ரைம், திரில்லர் வெப்சீரிஸான இது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

குரங்கு பெடல் (தமிழ்) – Amazon Prime video

குரங்கு பெடல்

கமலக்கண்ணன் இயக்கத்தில் சந்தோஷ் வேல்முருகன், காளி வெங்கட், ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலசந்தர், செல்லா மற்றும் நான்கு சிறுவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரங்கு பெடல்’. பள்ளி கோடை விடுமுறையின் போது சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளவதில் போட்டிப் போடும் இரண்டு சிறுவர்களின் நாஸ்டால்ஜியா கதை இது. இந்தப் படம் ‘Amazon Prime video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Gangs of Godavari (தெலுங்கு) – Netflix

Gangs of Godavari

கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் விஷ்வக் சென், நேகா ஷெட்டி, அஞ்சலி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Gangs of Godavari’. 1980 காலகட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன் திரில்லர் கதையான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Iron Claw (ஆங்கிலம்) – Lionsgate play

The Iron Claw

சீன் டர்கின் இயக்கத்தில் ஜாக் எஃப்ரான், ஜெர்மி ஆலன் வைட், ஹாரிஸ் டிக்கின்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Iron Claw’. 1980களில் மல்யுத்தத்தில் வரலாற்றை உருவாக்கிய பிரிக்க முடியாத வான் எரிச் சகோதரர்களின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ‘Lionsgate play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.