உதகமண்டலம் (ஊட்டி) மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்ததுடன் மலைப்பாதையில் போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஊட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளை மீட்டெடுக்கும் விதமாக சோலைக்காடுகளை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு மற்றும் பிற இன மரம் செடி கொடிகளை அகற்ற சென்னை உய்ரநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற கட்டிடத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், பொதுப்பணி, […]