மொபைல் நம்பர்களுக்கு கட்டணம் வசூலிக்கபடாது – வதந்திகளுக்கு TRAI முற்றுப்புள்ளி

டெலிகாம் துறை இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்து வருவதால் புதிய மாற்றங்கள் எல்லாம் வேகமாகவும், உடனடியாகவும் அமலுக்கு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை 5ஜி நெட்வொர்க்கை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில், புதிய கட்டண முறையை டிராய் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு ஒரு நிரந்தரமான கட்டணத்தை ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இந்த கட்டணங்கள் மெல்ல மெல்ல உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தி நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், டிராய் எடுக்கப்போவதாக வெளியான தகவல் கூடுதல் அதிருப்தியை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

அதாவது, மொபைல் நம்பர்களுக்கும், டூயல் சிம் கார்டுகள் பயன்படுத்தும்போது, அதில் அதிகம் பயன்படுத்தாத சிம் கார்டுகளுக்கும் கட்டணம் வசூலிக்க டிராய் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்கீழ், பொதுமக்கள் பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியானது. 

ஒரு முறை கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளை டிராய் பரீசிலித்து வருகிறது. அதாவது, உங்கள் மொபைல் ஆப்ரேட்டர் உங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் லேண்ட்லைன் எண்ணுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பும் ஏற்படலாம். ஒரு மொபைல் எண் என்பது மதிப்புமிக்க பொது வளமாக பார்க்கப்படுகிறது. எனவே, அதன்மீது கட்டணம் வசூலிக்க TRAI முடிவெடுத்துள்ளது. TRAI இதனை மொபைல் ஆப்ரேட்டர்களிடம் இருந்து வசூலிக்க திட்டமிடப்பட்டு, இதனை வாடிக்கையாளர்களிடம் இருந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் வசூலிக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

குறைவான பயன்பாட்டுடன் எண்களை வைத்திருக்கும் ஆபரேட்டர்களுக்கு அபராதம் விதிக்கலாமா என்றும் TRAI பரிசீலிப்பதாகவும், அதாவது, ஒருவர் ஒரே மொபைல் ஆப்ரேட்டரின் இரட்டை சிம்களை கொண்டுள்ள சந்தாதாரர் என்றால் அவர் நீண்ட காலமாக ஒன்றைப் பயன்படுத்தமால் இருப்பார். ஆனால் பயனர்களை இழக்கக் கூடாது என்பதால் அந்த எண்ணை ரத்து செய்யாமல் வைத்திருப்பது தவறாகும், அதற்கு அபாரம் விதிக்க TRAI முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இதனை டிராய் முற்றிலும் நிராகரித்துள்ளது. அப்படியான எந்த திட்டமும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் இல்லை என்றும், டிராய் பெயரில் வெளியாகியிருக்கும் வதந்தி, இதுபோன்று எந்த தகவலையும் தங்கள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறது. மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் பரப்பப்பட்டிருக்கும் இந்த செய்திகளுக்கு கடும் கண்டம் என்றும் டிராய் தெரிவித்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் உள்ளது?

இதுபோன்ற நடைமுறை பல்வேறு நாடுகளிலும் உள்ளது. இதில் நெதர்லாந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, டென்மார்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, குவைத், சுவிட்சர்லாந்து, போலந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, போன்ற நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி, மக்களவை தேர்தலுக்கு பின் ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி, தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வரும் நிலையில், அதற்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த விலை உயர்வு வந்தால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.