சென்னை தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். தியாகத் திருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பக்ரித் தொழுகை நடந்த பிறகு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவைகளை பலி கொடுத்து இதில் கிடைக்கும் இறைச்சியை 3 பாகங்களாக பங்கு பிரிப்பர். முதல் பாகத்தை தனது குடும்பத்தினருக்கும், 2ஆவது பாகத்தை தனது உறவினர்களுக்கும் 3ஆவது பாகத்தை ஏழை எளியவர்களுக்கும் கொடுப்பது வழக்கம். […]