நாளை வருகிறது OnePlus Nord CE 4 Lite 5G… இதன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

OnePlus Nord CE 4 Lite 5G Features: உலகிலேயே இரண்டாவது அதிக ஸ்மார்ட்போன் விற்பனையை கொண்ட நாடு என்றால் அது இந்தியாதான். சீனா இதில் முதலிடத்தில் உள்ளது. எனவே, உலகில் உள்ள பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த இரண்டு நாடுகளின் வாடிக்கையாளர்களை கவரவே பல மொபைல்கள் மாதாமாதம் சந்தையில் இறக்குகின்றனர். 

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் மொபைல்களுக்கு ஏற்கெனவே நல்ல வரவேற்பு இருந்தாலும், தனித்தன்மையான அம்சங்களுடன் மொபைல்கள் வரும்போது அதற்கு கூடுதல் வரவேற்பு இருக்கும். பட்ஜெட் விலையில் வரும் ஸ்மார்ட்போன்கள், நல்ல தரமான கேமரா கொண்ட மொபைல்கள், கேமிங்கிற்கான மொபைல்கள் என ஒவ்வொரு தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு அம்சங்கள் இருக்கும்.

OnePlus Nord 4 சீரிஸ்

அந்த வகையில், OnePlus ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையில் பெரிய வரவேற்பை பெற்றவையாகும். OnePlus நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் மொபைலான OnePlus Nord CE 4 Lite 5G மொபைலை அந்நிறுவனம் நாளை (ஜூன் 18) அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த வாரம் Nord சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த Nord சீரிஸில் OnePlus Nord CE 4 Lite 5G மட்டுமின்றி OnePlus Nord 4 மொபைலும் விற்பனைக்கு வர உள்ளது. இதனை நீங்கள் அடுத்த வாரம் அமேசான் மூலம் வாங்கலாம்.

There’s a long binge brewing.#ComingSoon pic.twitter.com/12SVVbJc8G

— OnePlus India (@OnePlus_) June 14, 2024

தற்போது அமேசான் தளத்தில் OnePlus Nord CE 4 Lite 5G மொபைல் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மொபைல் India’s Bureau Of Indentification (BIS) என்ற பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த மொபைலின் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களும் தெரியவருகின்றன. இந்நிலையில், OnePlus Nord CE 4 Lite 5G மொபைலின் சிறப்பும்சங்கள் குறித்து இதில் காணலாம். 

இதுவரை கசிந்த தகவல்கள்…

OnePlus Nord சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் நாளை (ஜூன் 18) அறிமுகமாக உள்ளது. அதுவும் சரியாக இரவு 7 மணிக்கு இரண்டு மொபைல்களும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து OnePlus India அதன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை பார்க்கும்போது மொபைல் நீல நிறத்தில் வருவது தெரிந்தது. அதுமட்டுமின்றி மொபைலின் டீசனும் தெரியவந்தது. இந்த மொபைல் ஃபிளாட் எட்ஜ் டிசைனில் வருகிறது.

8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் இந்த மொபைல் அறிமுகமாகிறது. இதில் 5,530mAh பேட்டரி மற்றும் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிரது. . மேலும் OnePlus Nord CE 4 Lite 5G மொபைல் Oppo K12x மொபைலை ஒத்ததுதான். எனவே, அதில் உள்ள அம்சங்கள் OnePlus Nord CE 4 Lite 5G மொபைலில் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

Oppo K12x அம்சங்கள்

Oppo K12x மொபைலில், 6.67 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உள்ளது. அதன் ரெப்ரெஷ் ரேட் 120Hz ஆகும். உச்ச பிரைட்னஸ் 1200 nits ஆகும். 50MP+2MP என இரட்டை அமைப்பு பின்புற கேமரா உள்ளது. Qualcomm Snapdragon 695 பிராஸஸர் இருக்கும். இந்த அனைத்தும் அம்சங்களும் OnePlus Nord CE 4 Lite 5G மொபைலில் இருக்க வாய்ப்புள்ளது. விலையும் ரூ.20 ஆயிரத்திற்குள் இருக்க வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.