எம்.எஸ் தோனியை விளம்பர தூதுவராக நியமித்துள்ள சிட்ரோன் இந்தியா நிறுவனம் தனது C3 ஏர் கிராஸ் மற்றும் C3 காரில் தோனி எடிசன் மாடல் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் தற்போது டீலர்களுக்கு இந்த மாடல் ஆனது வர துவங்கியுள்ளது. சிறப்பு தோனி எடிசனில் இடம் பெற போகின்ற வசதிகள் என்ன என்பதை எல்லாம் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.
விற்பனையில் உள்ள மாடலில் இருந்து சற்று மாறுபட்ட டிசைனை வெளிப்படுத்தும் வகையில் பாடி ஸ்டிக்கரிங் மட்டுமே வெளிப்புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏழாம் நம்பர் என்பதை குறிக்கும் ஸ்டிக்கரிங் தோனி பயன்படுத்தி வருகின்ற ஜெர்சியின் எண்ணை குறிக்கின்ற ஏழு என்ற எண் ஆனது தற்பொழுது பக்கவாட்டு பேனல் மற்றும் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி டிசைனில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை கூடுதலாக தோனி எடிசன் என்ற பெயரில் எழுத்துக்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இன்டிரியரில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சங்கள் பல்வேறு ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தோனியின் கையெழுத்து, நம்பர் 7 போன்றவை இருக்கைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றது மற்றும் தோனி எடிசனுக்கு டூயல் டோன் இருக்கைகளுக்கான நிறங்கள் மற்றும் சீட் பெல்ட் என அனைத்திலும் டூயல் டோன் வண்ணங்கள் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் ஒளிரும் வகையிலான டோர் சில்ஸ் டாஷ்போர்டு கேமரா உள்ளிட்ட அடிப்படையான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன 5 மற்றும் 7 இருக்கைகளில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆனது விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.
5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள தோனி எடிசனின் விலை ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.