நீலகிரி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் எனப்படும் கலெக்டர் குடியிருப்பு ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகை பகுதியில் அமைந்திருக்கிறது. வனத்தை ஒட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஆட்சியர் குடியிருப்பு வளாக பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஆட்சியர் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த இரண்டு கரடிகள், அங்கும் இங்கும் ஓடியுள்ளன. இதைக் கண்ட பணியாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற வனத்துறையினர், கரடிகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர், “கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்த கரடிகளை கண்காணித்து காட்டுக்குள் விரட்டினோம். தமிழகம் விருந்தினர் மாளிகையைச் சுற்றிலும் வனப்பகுதிகள் உள்ளன. இதனால், வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது இயல்பான ஒன்றுதான். மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இவற்றின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் ” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88