இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடி சதம் அடித்துள்ள 6 வீரர்கள்!

பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு ஆகும். ஒரு சிலர் இதிலும் பல சாதனைகளை வைத்துள்ளனர். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை அடித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை. அனைத்து பேட்டர்களும் அந்த சாதனையை அடைய முடியாது. அதிலும் சர்வதேச தரத்தில் ஒரு சதம் அடிப்பது கூட கடினமான விஷயம். ஏனெனில் ஒவ்வொரு அணியிலும் பந்துவீச்சாளர்கள் சிறந்த தரத்தில் இருப்பார்கள். சிறிய அணியாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக சதம் அடித்துவிட முடியாது. 

தற்போது பல வீரர்கள் தங்கள் நாட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நாடுகளில் குடியுரிமை வாங்கி கொண்டு அந்த நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுகின்றனர். இந்த லிஸ்டில் பல வீரர்கள் இருந்தாலும், இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு அணிகளுக்காகவும் சதம் அடித்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்.

ஜோ பர்ன்ஸ் (Joe Burns) 

ஆஸ்திரேலியாவுக்காகவும், இத்தாலிக்காகவும் ஜோ பர்ன்ஸ் ஆசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வந்த ஜோ பர்ன்ஸ் சமீபத்தில் அந்நாட்டை விட்டு வெளியேறினார். தனது மறைந்த சகோதரனுக்காக இத்தாலியில் குடிபெயர்ந்தார். மேலும் அந்த நாட்டு அணிக்காக தற்போது விளையாடி டி20 போட்டியில் சதம் அடித்துள்ளார். அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்காக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஒரு சதம் அடித்துள்ளார் ஜோ பர்ன்ஸ்.

கெப்ளர் வெசல்ஸ் (Kepler Wessels)

கெப்லர் வெசல்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்காக சதம் அடித்துள்ளார். இரண்டு அணிகளுக்காக விளையாடி இந்த சாதனையை செய்த முதல் கிரிக்கெட் வீரர் கெப்லர் வெசல்ஸ். அவர் முதலில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடி ஒரு போட்டியில் சதம் அடித்தார். பிறகு அவரது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அந்த நாட்டு அணிக்காக சதம் விளாசியுள்ளார்.

ஈயோன் மோர்கன் (Eoin Morgan)

சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் இயோன் மோர்கன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். முதலில் அயர்லாந்திற்காக விளையாடி வந்த மோர்கன், பின்னர் இங்கிலாந்து அணியில் இணைந்தார். மேலும் உலகக் கோப்பை வென்ற கேப்டனாகவும் மாறினார்.

எட் ஜாய்ஸ் (Ed Joyce)

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்காகவும் சதம் அடித்த மற்றொரு இடது கை பேட்டர் எட் ஜாய்ஸ். எட் ஜாய்ஸ் முதலில் இங்கிலாந்துக்காக விளையாடி சதம் அடித்தார். பின்னர் அயர்லாந்திற்காக விளையாடினார்.

மார்க் சாப்மேன் (Mark Chapman)

நியூசிலாந்து பேட்டர் மார்க் சாப்மேன் ஹாங்காங்கை சேர்ந்தவர் என்பது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது. புகழ்பெற்ற மார்க் சாப்மேன் நியூஸிலாந்து அணிக்காக விளையாடுவதற்கு முன்பு, ஹாங்காங் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் பல சாதனைகளை புரிந்தார்.

கேரி பேலன்ஸ் (Gary Ballance)

ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கேரி பேலன்ஸ் இங்கிலாந்தில் குடிபெயர்ந்து அந்த அணிக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். பின்னர் ஜிம்பாப்வேக்கு திரும்பி வந்து தனது சொந்த அணிக்காகவும் சதம் அடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.