கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நிசாந்த விக்கிரமசிங்க நியமனம்

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க நேற்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார்.

இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டது. முன்னாள் செயலாளர் செல்வி நயனாகுமாரி சோமரத்ன ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன், தெஹியோவிட்ட மற்றும் பசரை பிரதேச சபைகளில் உதவி பிரதேச செயலாளரகவும், பதுளை மாவட்ட சமுர்த்தி ஆணையாளராகவும், ஊவாபரணகம பிதேச சபையின் செயலாளராகவும், ஊவா மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளராகவும், அம் மாகாண சபையின் ஆணையாளராகவும், தெங்கு, அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாகவும், இரத்தினக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாகவும், காணி, மறுசீரமைப்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

ஜயர்தனபுர பல்கலைக் கழகத்தின் வர்த்தகப் பிரிவின் விசேட பட்டதாரியான இவர் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் எம்.ஏ. பட்டதாரியுமாவர்.

சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான அனுஷா கோகுல (மனித வள அபிவிருத்தி), அப்சரா நிசங்க( நிர்வாகம்), பணிப்பாளர் (நாயகம் தொழில்நுடபம்) தம்மிக்க ரணதுங்க, கடற்றொழில் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. அருளானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.