சென்னை: இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகமானது. இது அந்த நிறுவனத்தின் ஃப்ளேக்ஷிப் மாடலாக வெளிவந்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மோட்டோரோலாவின் எட்ஜ் வரிசையில் ‘மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ரா’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளிவந்துள்ளது. மற்ற நிறுவனங்களின் ஃப்ளேக்ஷிப் மாடலுடன் ஒப்பிடும் போது இதன் பேட்டரி சக்தி நீடித்த திறன் கொண்டுள்ளதாக ஸ்மார்ட்போன் ரிவ்யூவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் pOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரேஷன் 3 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- மூன்று ஆண்டுகளுக்கான இயங்குதள அப்டேட்
- 50 + 50 + 64 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- மோட்டோ ஏஐ மற்றும் போட்டோ என்கேஜ்மென்ட் இன்ஜின் மூலமாக இந்த போனின் கேமரா அனுபவம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது
- டெக்ஸ்ட் ப்ராம்ப்ட் அடிப்படையில் இமேஜ் ஜெனரேட் செய்யும் ஏஐ அம்சம் இதில் உள்ளது
- 4,500mAh பேட்டரி
- 125 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
- ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது
- 12ஜிபி ரேம்
- 512ஜிபி ஸ்டோரேஜ்
- 5ஜிநெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.59,999