`என் சுவாசக் காற்றே’, `நெஞ்சினிலே’,`அயலான்,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் இஷா கோபிகர். இவர் தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
திறமை இருந்தாலும் பெண்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. `காம்ப்ரமைஸ்’ என்ற பெயரில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய அழைக்கப்படுவதுண்டு.
திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் பலர் இது போன்ற சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். சிலர் இந்த சமரசங்களுக்கு உட்படாமல் திரைத்துறையை விட்டு விலகியதாகவும் கூறியதுண்டு.
இந்நிலையில் சமீபத்தில் இன்டர்வியூ ஒன்றில் பேசியிருந்த இஷா கோபிகர், தன்னுடைய ஆரம்பகால திரைத்துறை பயணத்தில் எதிர்கொண்ட சவால்கள் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், “உங்களால என்ன செய்ய முடியும்ங்கிறத தாண்டி, ஹீரோக்கள் மற்றும் நடிகர்கள் தான் முடிவு செய்வாங்க. நீங்க MeToo பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. என்னோட காலத்துல நிறைய நடிகைகள் இண்டஸ்ட்ரியை விட்டு விலகிட்டாங்க.
இன்னும் சிலர் மட்டும் இண்டஸ்ட்ரிய விட்டுப் போகாம இருக்காங்க, அவங்கள்ல நானும் ஒருத்தி. எனக்கு 18 வயசு இருந்தப்ப, ஒரு செகரட்டரியும், நடிகரும் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும்படி (casting couch) என்னை அணுகினாங்க. வேலை கிடைக்கணும்னா நடிகர்கள் கூட நட்பா பழகணும்னு சொன்னாங்க.
எனக்கு 23 வயசு இருந்தப்போ, இண்டஸ்ட்ரியில பிரபலமான நடிகர் ஒருத்தர், மற்ற நடிகைகளோட தொடர்பில் இருக்கிறார்னு வந்ததிகள் பரவியதால, டிரைவர், உட்பட யாரையும் கூட்டிட்டு வராம அவரை தனியா வந்து பார்க்கச் சொன்னார்.
அவர், `என்னை பற்றி ஏற்கெனவே சர்ச்சைகள் இருக்கு. ஊழியர்கள் வதந்திகளைப் பரப்புறாங்கன்னு சொன்னாரு. ஹிந்தி திரையுலகத்துல அவர் ஏ -லிஸ்ட் நடிகரா இருந்தார்’’ என்றார்.